பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வரலாற்றில் இராமேஸ்வரம் இராமேஸ்வரம் பற்றிய தொன்மையான செய்திகள் வரலாற்றில் காணப்படவில்லை. இராமேஸ்வரம் பகுதி பாண்டியர். சோழர்கள். சிங்களவர். விஜய நகரமன்னர். மதுரை நாயக்கர்கள். மறவர் சிமை அதிபதிகளான சேதுபதிகள் ஆகிய பல்வேறு அரசுகளின் ஆட்சிப் பகுதியாக இருந்து வந்துள்ளது என்பதை இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் செப்பேட்டு ஆவணங்களில் இருந்து அறிய முடிகிறது. இராமேஸ்வரம் அமைந்துள்ள இராமேஸ்வரம் திவு முதலில் மதுரை பாண்டிய மன்னர்களது ஆட்சிப் பகுதிகளாக இருந்தாலும் கி.பி.பத்தாவது நூற்றாண்டில் பாண்டிய மண்டலத்தைக் கைப்பற்றிய பராந்தக சோழன் இராமேஸ்வரம் திருக்கோவிலில் துலாபாரம் நிகழ்த்தி அவனது நிறைக்குரிய பொன்னைக் கோவிலுக்கும். அந்தணர்களுக்கும் பகிர்ந்தளித்தான் என்பது அவனது கி.பி.932ம் ஆண்டு வேளஞ்சேரி செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் பற்றிய வரலாற்றில் கிடைக்கும் முதல் செய்தியாக இராமேஸ்வரம் திருக்கோவிலின் தொன்மையான செப்புத் திருமேனிகள் பத்தாம் நூற்றாண்டினவாக இருப்பது இங்குச் சோழர் செல்வாக்கு ஏற்பட்டதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது என்று குறிப்பிடப் படுவதைச் சுட்டலாம்: 1. Nagasanny Dr. R. Valancheri Copper Flate 2. Nagasamy Dr. R. South Indian Studies (1972) Part - || |