பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இராமர் செய்த கோயில் 1. மாலிக்காபூர் மதுரை வந்தபொழுது அங்கிருந்த பாண்டியன் நகரை விட்டே ஓடிவிட்டான். ஏமாற்றமடைந்த அந்தக் கொள்ளைக்காரன் மதுரையில் கோயிலைக் கொள்ளையிட்டு அணிமணிகளையும் அங்கிருந்த யானை களையும் கைப்பற்றிக் கொண்ட பிறகு அடுத்த பத்து நாள்களில் தில்லி திரும்பினான். மதுரை வரும் வழியில் பூரீரங்கம் - சிதம்பரம் கோயில்களைக் கொள்ளையிட்டவன். இந்தியா முழுவதும் மிகப்பிரசித்தம் பெற்ற இராமேஸ்வரம் கோயில் பற்றித் தெரிந்திருக்க மாட்டானா? மதுரையில் இருந்து எண்பது கல் தொலைவில் உள்ள இராமேஸ்வரத்திற்குச் செல்லாமல் பத்து நாட்கள் மதுரையில் ஒய்வு எடுத்துக் கொண்டவனாகப் பொழுது போக்கி இருப்பானா என்பது சிந்திக்க வேண்டிய செய்திகள். 2) இராமேஸ்வரம் படையெடுப்பின் பொழுது அங்கு ஒரு தொழுகைப் பள்ளியை அமைத்தான் என்பது வரலாறு. இதே பள்ளியை கி.பி.1318-ல் படையெடுத்து வந்த தில்லி தளபதி குஸ்ருகான் பழுதுபார்த்தான் என்ற செய்தியும் உள்ளது.' 3) இவைகளுக்கெல்லாம் மேலாக இராமேஸ்வரத்தில் செப்டம்பர் 1994ல் நடைபெற்ற தமிழகத் தொல்லியல் ஆய்வுக் கழகத்தில் ஐந்தாவது கருத்தரங்குகளில் கலந்து கொண்ட இராமேஸ்வரம் நகரப் பேரூராட்சியின் முன்னாள் தலைவரும் ஆந்திரநாட்டு மக்களுக்குப் புரோகிதராகவும் இருந்த கோடுர் எஸ். ராஜகோபால் சாஸ்திரி வெளியிட்ட தகவல். “இராமேஸ்வரத்தில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் களுக்கும் முஸ்லீம் அல்லா தவர்களுக்கும் இடையில் குறிப்பாகப் பிராமணர்களிடம் நல்லநேச உறவுகள் தொடர்ந்து நீடித்து வருவதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. அதாவது தில்லி தளபதி மாலிக்காபூரின் மதுரைக் கோயில் கொள்ளையை யடுத்து இராமேஸ்வரம் கோயிலையும் கொள்ளையிட வந்தால் என்ன செய்வது என இராமேஸ்வரம் கோயில் அர்ச்சகர்கள் பயந்து குழப்பமடைந்த நிலையில்