பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 4 : அப்பொழுது இராமேஸ்வரத்து மரை க்காயர் சிலர் அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் இராமேஸ்வரம் கோயில் திருமேனிகளையும் திருவாபரணங்களையும் குருக்களையும் தங்களது மரக்கலங்களில் ஏற்றிச் சென்று பக்கத்திலுள்ள திவு ஒன்றில் பத்திரமாக வைத்திருந்து. மாலிக்காபூர் இராமேஸ்வரத்திலிருந்து திரும்பிய செய்தி கிடைத்த பிறகு அவைகளையும் குருக்களையும். இராமேஸ்வரத்தில் பத்திரமாகச் சேர்ப்பித்தார்கள்” இந்த செவிவழிச் செய்தியும் மாலிக்காபூரின் படையெடுப்பை உறுதிசெய்கின்றன. மாலிக்காபூர் மதுரை வருவதை அறிந்து மதுரை மன்னன் நகரை விட்டே ஓடி விட்டான். அவன் விட்டுச் சென்ற அணி மணிகளையும் கோயில் திரவியங்களையும் கைப்பற்றிய பிறகு அடுத்த பத்து நாள்கள் மதுரையில் ஒய்வு எடுத்துக் கொண்டு தங்கினாரா என்ற வினாவிற்கு எதிர்மறை வரிடையாக இராமேஸ்வரம் படையெடுப்பு அமைகிறது. இந்தச் செய்திகள் பாண்டிய நாட்டில் உறுதியற்ற அரசியல் சூழ்நிலையைக் குறிப்பிடுவனவாகும். அடுத்துப் பதினைந்து பதினாறாவது நூற்றாண்டுகளில் இங்கு ஆந்திர நாட்டு விஜயநகரப் பேரரசின் பிடி வலுவுடன் இருந்ததால், இராமேஸ்வரத்திற்குத் தென்னாட்டு மகா மண்டலேஸ்வரர் களும் விஜயநகரப் பேரரசருமே தலயாத்திரை மேற்கொண்ட செய்திகள் வரலாற்றில் பதிவு பெற்றுள்ளன. பேரரசர் ஹரிஹரரின் (கி.பி. 1377-1404) தென்னாட்டு ஆளுநரான முதலாவது விருபாட்சா இராமேஸ்வரம் வந்தார். இராமநாதசுவாமி திருமுன்னர் துலாபாரம் நிகழ்த்திப் பொன்னை ஈந்தார். இவரையடுத்து விஜயநகர ஆளுநர் கோப்ப திப்பா என்பவர் கி.பி. 1408-ல் இராமேஸ்வரம் தரிசனத்தை முடித்தார். கி.பி. 1497-ல் பேரரசர் நரசிம்மர் இராமேஸ்வரம்