பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-14 இராமர் செய்த கோயில் திருக்கோவிலுக்கு யாத்திரையாக வந்து பதினாறு தர்மங்களையும் செய்தார். கி.பி. 1517 ல் பேரரசர் கிருஷ்ணதேவராயர் இராமேஸ்வரம் தல யாத்திரை மேற்கொண்டு இராமசேதுவில் மூன்று நாள்கள் தங்கியிருந்து முப்பத்து இரண்டு அறங்களையும் தமது இரு துணைவியாருடன் நிறைவேற்றி மகிழ்ந்தார். தென்னகத்து மகாமண்டலேசுவரரான சாளுவ திம்மா கி.பி.1532-ல் இராமேஸ்வரத்திற்கு வருகை தந்தார். இன்னொரு மகாமண்டலேசுவரான சாளுவ நரசிம்மர் என்பவர் கி.பி.1483 ல் இங்குத் தலயாத்திரையாக வந்தார். இவர்களையடுத்து ஆன்மீகப்பயணமாக இராமேஸ்வரத் திற்கு வருகை மேற்கொ ண்டவர்கள் வருமாறு. கி.பி. 1659 தஞ்சாவூர் மன்னர் விஜயரெகுநாத நாயக்கர் இராமேஸ்வரத்தில் ஹறிரண்ய கர்ப்பம், துலாபாரம் ஆகிய தர்மங்களைச் செய்தார். கி.பி. 1677 மகாராஷ்டிர மன்னர் சிவாஜி. கி.பி. 1759 தஞ்சை மன்னர் பிரதாப சிம்மன் கி.பி. 1779 தஞ்சை மன்னர் துல்ஜாஜி கி.பி. 1792 திருவாங்கூர் மன்னர் கி.பி. 1795 பாஞ்சாலாங்குறிச்சி பாளையக்காரர் கட்ட பொம்மு நாயக்கர் கி.பி. 1795 தஞ்சை மன்னர் சரபோஜி, | | கி.பி. 1795 சென்னை கோட்டையிலுள்ள கிழக்கிந்தியக் கம்பெனி ஆளுநர் ஹோபர்ட். கி.பி. 1802 ஆந்திர நாட்டு சிந்தபள்ளி ஜமின்தார் கி.பி. 1804 இங்கிலாந்து நாட்டு ஜார்ஜ் வாலன்டைன் பிரபு கி.பி. 1808 மைசூர் நாட்டு திவான் பூர்னை யாவும் அவரது மக்களும்