பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பதிப்புரை வரலாற்றின் தூசு படிந்த ஏடுகளில் மறைந்திருக்கும் சேதுநாட்டின் தொன்மைச் சிறப்பினையும் வரலாற்றுப் பெருமையினையும் பல அரிய ஆய்வு நூல்களாக வெளியிட்டு வரும் முதுநாட்டு வரலாற்றுச் செம்மல் டாக்டர் எஸ்.எம்.கமால் அவர்களின் இந்தத் தொகுப்பினை எங்களது பதினைந்தாவது வெளியீடாக அச்சில் கொண்டு வருவதில் நாங்கள் பெருமையடைகிறோம். வரலாற்று ஆய்வாளர்களும் வாசகர்களும் வழக்கம் போல எங்களது இந்த நூலுக்குத் தக்க ஆதரவை நல்குவார்கள் என நம்புகிரறோம் டிசம்பர் 2004 - சர்மிளா பப்ளிஷர்ஸ்