பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்- 111 1) இராமேஸ்வரம் திருக்கோவில் அமைப்பு பல நூற்றாண்டுகளாகப் பக்தி உணர்வும் இராமாய னக்காப்பியத்தின் தாக்கமும் பெற்ற இந்திய மக்கள் நேரில் வந்து இராமநாத சுவாமியைத் தரிசித்து மன நிறைவும் மகிழ்ச்சியும் அளிக்கத் தக்கதாக இராமேஸ்வரம் திருக்கோவில் அமைந்துள்ளது. கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள இந்தக் கோவில் பிற்காலத்தில் மறவர் சீமை மன்னர்களால் மிகவும் உயர்வாக மதித்துப் போற்றப்பட்டு வந்துள்ளது. தேவார காலத்தில் சின்னஞ் சிறு கற்றளியாக அமைந்திருந்து இன்று பிரம்மாண்டமான கட்டுமானங்களைக் கொண்டதாக ஏறத்தாழ 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து காணப்படுகிறது. மக்களது ஆன்மீகச் செழுமையை அறிவுறுத்துவதாகவும் இருந்து வருகிறது. இந்த ஊரின் கடற்கரையில் சிதாப்பிராட்டியினால் கடற்கரை மணலைக் கொண்டு அமைத்த சிவலிங்கம் பூரீ ராம பிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது இந்தத் தலத்தின் ஐதிகமாகக் கருதப்பட்டு வருகிறது. ஆனால் இந்தக் கோவில் அமைந்துள்ள சுவாமி அம்பாள் சன்னதிகளுக்கு கிழக்கே சுமார் 100 கஜம் தொலைவில் கடல் கடந்த காலங்களில் பின்னோக்கி சென்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இராமேஸ்வரத் திற்கு மட்டுமல்லாமல் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள பல ஊர்களுக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக வடக்கே மாமல்ல புரத்திலிருந்து தெற்கே இராமேஸ்வரம் வரை அமைந்துள்ள