பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 17 கிழக்குக் கடற்கரையை ஆய்வு செய்தால் கடந்த ஒராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கடல்நீர் நிலத்தில் புகுந்து நிலை கொண்டிருப்பது தெரிய வரும். சிற்பக் கலையின் சிறந்த கட்டுமான அமைப்பிற்கு எடுத்துக்காட்டாக அமைந்து காணப்படும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலைக் கடல் அலைகள் இன்னும் சூழ்ந்து கொண்டு சிதைத்து வருகின்றன. இன்னும் சற்று தெற்கே வந்தோமானால் சோழப் பேரரசின் சிறந்த துறைமுகமாக விளங்கிய நாகப்பட்டணம் நகருக்குள் ஏறத்தாழ 2 கல் தொலைவிற்கு கடல் உள்நோக்கி வந்திருப்பதும். துறைமுகப் பகுதி மேடிட்டுச் சாதாரணக் குளப்பரப்பு போல காணப்படுகிறது. அதனை அடுத்த தரங்கம்பாடியில் கடற்கரைக் கோயிலான மாசிலாமணி ஈஸ்வர ரது திருக்கோவிலின் கருவறையைக் கடல் அலைகள் சூழ்ந்து சிதைத்துக் கொண்டிருக கின்றன. இன்னும் தெற்கே சங்க காலத்தின் முட்டாச் சிறப்பின் பட்டினமாக விளங்கிய பூம்புகார் கடலினால் அழிக்கப்பட்டு இன்று ஒரு சிறு மீனவர் கிராமமாக மாறியுள்ளது. இதே அவல நிலைதான் இன்னும் தெற்கேயுள்ள அதிவீரராமன் பட்டினம். தொண்டி. தேவிபட்டினம் ஆகிய பேரூர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்தக் கடற்கரை தொண்டியிலிருந்து தெற்கே துத்துக்குடி வரையிலான பகுதிக்குக் கிழக்கே எதிர்க்கரையில் வடக்குத் தெற்காக சுமார் 200 கல் தொலைவு நீளமாக அமைந்துள்ள இலங்கை நாடு மேலே சொன்ன துறைமுகங்களுக்கு அழிமானம் ஏற்படாமல் இயற்கையான தடைச் சுவராக இருந்து காத்து வருகிறது . இராமேஸ்வரத்திற்கும் இந்த உண்மை பொருந்து வதாகும். இதற்கு எடுத்துக்காட்டாக 23.12.1964-ம் தேதி இரவு ஏற்பட்ட புயலையும். மழையையும் குறிப்பிடலாம். இலங்கை நாட்டிற்கு கிழக்கே வங்கக் கடலிலிருந்து எழுந்த இந்தப் புயல் இராமேஸ்வரத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தாமல் விட்டுச் சென்றது ஆகும். இயற்கையிலேயே இவ்வித பாதுகாப்பினால் இராமேஸ்வரம் நகரும். திருக்கோவிலும் இயல்பான நிலையில் இருந்து வந்துள்ளன