பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 49 இதுவரை இராமேஸ்வரம் திருக்கோவில் பற்றிய புராண இலக்கிய வரலாற்றுச் செய்திகளைப் பார்த்தோம். இப்பொழுது அந்தக் கோயிலின் பெருமைக்கும் பழமைக்கும் உரியதாக உள்ள கட்டுமானங்களையும் அவைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் தெய்வத் திருமேனிகளைப் பற்றியும் பார்க்கலாம். இராமேஸ்வரத் திருக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராமேஸ்வரம் கோயிலின் அமைப்பு பற்றிய தரைப்படம் நாமும் ஏனைய பக்தர்களைப் போல அக்னி திர்த்தக் கரையிலிருந்து மேற்கே சென்று இராமேஸ்வரம் கோயிலின் முகப்பு மண்டபத்தைக் கடந்து சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நுழைவு வாயிலின் வழியாக உள்ளே செல்கிறோம். அப்பொழுது நமது கண்களில் முதலில் படுவது வலது புறத்தில் அமைந்துள்ள அனுமார் ஆலயம் ஆகும். இங்குள்ள மூலவர் தெற்கு நோக்கியவாறு நிற்கின்றார். இதனையடுத்து அனுப்பு மண்டபம் வழியாக சன்னதி நோக்கிச் செல்லும் பொழுது இடையில் உயர்ந்த கொடிமரம் நிற்கின்றது. அங்குச்சுதையினாலான பெரிய நந்தியின் சிலை உள்ளது. இதற்கு இருபுறமும் தூண்களில் மதுரை ஆளுநராக இருந்த விசுவநாத நாயக்கர். அவரது மகன் கிருஷ்ணப்ப நாயக்கர் ஆகியவர்களது சிலைகள் சுவாமியை சேவித்த நிலையில் உள்ளன. இதனையடுத்துச் சுவாமி சன்னதிக்கு இருபுறமும் கிழக்கு நோக்கியவாறு மூத்த பிள்ளையார் இளைய முருகன் ஆகியோரின் சிறு கோவில்கள் இருக்கின்றன. அடுத்து அமைந்திருப்பது முதற் பிரகாரம். இதன் தென்கிழக்கு மூலையில் சூரியன். உஷா. பிரத்யுஷா. சகஸ்ரலிங்கம் ஆகிய திருவுருவங்களும், தேவார மூவரும். அறுபத்து மூன்று நாயன்மார்களும், மூலவர். உற்சவர் விக்கிரகங்களும் உள்ளன. தொடர்ந்து வலதுபுறம் திரும்பினால், மேற்குப் பிரகாரத்தில் வச்சிரேசுவரர். மனோன்மணி. கந்தன். சங்கரநாராயணன். அர்த்தநாரீஸ்வரர். கங்காள நாதர். சந்திரசேகரர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. பிறகு வடக்குப்