பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5() இராமர் செய்த கோயில் பிரகாரத்தில் இராமர். சிதை. இலக்குமணன் அனுமன். விபீஷணன் முதலிய 11 சிலைகளும், விசாலாட்சி. ஜோதி லிங்கம். நடராஜர் ஆகியோர் சன்னதிகள் அமைந்துள்ளன. இதனையடுத்து கிழக்குப் பிரகாரத்தின் வடபுறத்தில் சந்திரன். கிருத்திகை உரோகினி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. இந்தப் பிரகாரத்தின் நடுவில் கருவறை அமைந்து ள்ளது. அதில் எழுந்தருளியுள்ள பூரீ ராமநாதர் கிழக்கே கடலை நோக்கியவாறு இருக்கிறார். இதன் மேற்குப் புறச் சுற்றில் திருக்கயிலாயக் காட்சி மிக அற்புதமாகப் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேலே ஐந்து தலைநாகம் அமைந்துள்ளது. இந்தக் கருவறையின் வடபுறத்தில் காசி விசுவநாதர் சந்நிதி அமைந்திருக்கிறது. இந்த மூர்த்திக்குத்தான் முதலில் பூசை முதலியவை நடைபெறுகிறது. இந்தச் சன்னதியின் தென்புறத்தில் இராமர். சிதை. இலட்சுமணன். அனுமான் ஆகியோரது திருவுருவங்கள் வெகு அழகாக அமைக்கப்பட்டுள்ளன. இதில் அனுமனது சிலை இராம பிரானைக் கூப்பிய கரங்களுடன் வணங்கிய நிலையில் இருப்பதாகவும். அவரது கரங்களுக்கு இடையில் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட இரு ஆத்ம லிங்கங்கள் அமைந்திருப்ப தாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சுக்ரீவனது திருவுருவம், இராமரை வணங்கிய நிலையில் தலை குனிந்து வாய் புதைத்துக் காணப்படுகிறார். இந்த சன்னதியின் எதிரே ஒரு துணில் சின்னப் பிரதானி கிருஷ்ணய்யங்காரின் உருவம் இருக்கிறது. இந்த சன்னதிகளைக் கடந்து தென் புறத்திலுள்ள வாயில் வழியாகச் சென்றால் அம்பிகை சந்நிதி உள்ளது. இங்கு அம்பரிகையின் பெயர் மலைவளர் காதலி என்றும் பர்வதவர்த்தினி என்றும். வழங்கப்படுகின்றது. இந்த சன்னதிக்குத் தென்கிழக்கு மூலையில் கல்யாண சுந்தரேசர்