பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 5 | உருவம் இடம் பெற்றுள்ளது. அவரது அருகில் வடக்கு நோக்கியவாறு பிரம்மன். திருமால் ஆகியோரது உருவங்களும் நிலைபெற்று உள்ளன. இதனையடுத்து மேற்குப் பிரகாரத்தின் தெற்கு மூலையில் செள பாக்கிய கணபதியும் சந்தான கணபதியும் எழுந்தருளியுள்ளனர். அதே பிரகாரத்தில் ப்ராமி. மாஹேஸ்வர, கெளமாரி, வைஷ்ணவி, வராகி, மாஹேந்திரி. சாமுண்டி முதலிய சப்த மாதர் உருவங்கள் இருக்கின்றன. தொடர்ந்து வடமேற்கு மூலையில் பள்ளி கொண்ட பெருமாளும். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரியும் வடகிழக்கு மூலையில் பள்ளியறையும் அமைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதிக்கு முன்னுள்ள சுக்கிரவார மண்டபத்தில் கிழக்கு நோக்கி அவுடலட்சுமி விக்ரகங்கள் இருக்கின்றன. இந்த உருவங்களுக்கு எதிரே தென்புறம் உள்ள எட்டுத் தூண்களில் துவாரபாலகர். சிவதுர்க்கா. மனோன்மணி. வாகிசுவரி. சேதுபதி கடம்பத் தேவர். புவனேஸ்வரி. அன்னபூர்ணா ஆகியோர்களின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மண்டபத்தைக் கடந்து மேற்கு நோக்கிச் சென்றால் அம்பாள் சன்னதியின் இரு பக்கங்களிலும் முறையே விஜயரகுநாத சேதுபதி. முத்திருளப்ப பிள்ளை. முத்து வடுகநாதத் தேவர். பெரிய திருவுடையாத் தேவர். சேதுபதி காத்தத்தேவர். சின்னனத்தேவர். இரகுநாத சேர்வை. இரண்டு துறவிகள். நரசிம்ம அவதாரம் ஆகிய திருவுருவங்கள் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. இரண்டாம் பிரகாரத்தில் கோபுர வாயிலுக்குள் தென்புறம் நோக்கி வல்லப கணபதியின் திருவுருவம் உள்ளது. இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்திற்குச் செல்லும் வழியில் இந்தப் பிரகாரத்தை அமைத்த திருமலை ரெகுநாத சேதுபதியின் திருவுருவச் சிலை அவரது மகனாகிய ஒரு சிறுவனுடன் காணப்படுகிறது. இதனையடுத்து மூன்றாம் பிரகாரத்திற்குள் நுழைந்தால் வடமேற்கு மூலையில் இராமர் இராமலிங்கப் பிரதிஷ்டை