பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Հ() இராமர் செய்த கோயில் அந்த இரு கோபுரங்களும் கட்டி முடிக்கப்படாமல் சென்ற நூற்றாண்டிலேயே மகாராஷ்டிரர். முகமதியர்கள் மற்றைய வெளிநாட்டவர்களின் படையெடுப்பால் நிலத்தின் பெருமதிப்பை கருத்தில் கொண்டு ஆலயத்தின் புனிதத் தன்மை ஆகியவற்றை சிதைத்துவிட்டனர். ஆலயத்தின் கிழக்குப் பகுதி இருபெரும் வாசல்களைக் கொண்டது. கிழக்குப் பகுதியில் தெற்கில் உள்ள வாசல் பார்வதி கோவிலுக்குச் செல்லும் பாதையாகும். இது நன்கு கட்டி முடிக்கப்பட்டது. பெரிய பாதையுடன் கிழக்கு வாசல் வெளிப்பிரகார மண்டபத்தைக் கட்டிய பெருமை 1640-ல் இரண்டாம் சடைக்கத் தேவர் தளவாய் சேதுபதி அவர்களைச் சாரும். இதன் நீள அளவு 500 அடிக்கு மேல் 600 அடிக்குள் அளவு கொண்டது. இது புனித பீட்டர் ஆலயத்தைவிட நீளமானது. ஆனால் அவை இரு பக்கமும் திறந்த வெளி மண்டபத்துடன் கூடிய 700 அடி நீளமுள்ள நேர்த்தியான பிரகார மண்டபம் ஆகும். இவ்வளவு பெரிய அளவுள்ள மண்டபம் இந்தியாவில் வேறு எங்கும் கான முடியாது. இந்த பிரகாரத்தின் இரு புறத்திலும் திறந்த வெளி மண்டபம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் வேலைப் பாடுடைய சிற்பங்கள் ஏதும் இல்லை என்றாலும் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கின்றது. மைய மண்டபத்திற்குச் செல்லும் பாதையில் உள்ள தூண்களில் 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சேதுபதி மன்னரது உருவச் சிலையும் அவற்றிற்கு எதிராக அவர்களது அமைச்சர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அவைகள் பல ஆண்டுகளாக வர்ணம் பூசப்படாமல் சிதிலமடைந்து இருக்கின்றன. மண்டபச் சுவர்கள் வெள்ளை. சிவப்பு. மஞ்சள், வர்ணங்களால் சுண்ணாம்பு சேர்த்து மேல் வண்ணம் பலமுறை அடுத்தடுத்து பூசப்பட்டிருந்ததால் சிற்ப வேலைகள் மூடப்பட்டும் மறைக்கப்பட்டும் இருக்கின்றன. | |னிதமான பொருட்கள் மீது பயனற்ற தன்மை வளர்வதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். இங்கு உயர்ந்த வாழ்க்கைத்தரம்