பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 57 இல்லை. நல்ல முன்னேற்றமான எண்னை வகள் இல்லை. ஆச்சாரமான பழக்கவழக்கங்கள் அப ப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மைசூர் மாநிலத்தில் உள்ள ஹளெ பீடு ஆலயத்தின் கலை துணுக்கத்தைவிடக் குறைவாக இருந்தாலும், அதன் சுற்றளவு 700 அடிதான். ஆனால் இராமேஸ்வாம் கோயிலில் சுற்றளவோ 4000 அடிக்கு மேலும் இருபுறமும் வளை வடிவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரகார அமைப்பின் பின்னால் உள் ள தொழிலாளர்களின் உழைப்பு. பொறுப்பு. கலைநுணுக்கம் ஆகியவை இந்தியாவில் உள்ள மற்ற எல்லாக் கோயில்களைக் காட்டிலும் மிகச் சிறந்தது. இப்படிப்பட் கோயில்கள் ஒரு சிலவே உள்ளன. இக்கோவரில் சிதிலம் அடைந்துள்ள கல்வெட்டுக்களைக் (50 ஆண்டுகளுக்கு முற்பட்டவை) கொண்டு ஆலயத்தின் முழு வரலாற்றையும் அறிந்து கொள்ள இயலும். மத்திய கருவறையானது கடுமையான சுண்ணாம்புக்கல் கொண்டு 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த உடையான் சேதுபதி என்பவரால் கட்டப்பட்ட பெருமை உடையது. மேற்குக் கோபுரமும், அதைச் சார்ந்த திருமதில்களும். 17ம் நூற்றாண்டைச் சார்ந்த சடைக்கத் தேவர் உடையான் என்பவருக்கு பெருமை சேர்க்கக் கூடியவை. முதற்பிரகாரமானது 190 அடி அகலமும் 307 அடி நீளமும் கொண்டதாலும் இதற்கு அடுத்ததாக உள்ள விமானங்கள். பிரகாரம், மதில் சுவர்கள். அதற்குட்பட்ட கருவறைகள் ஆகியவை சேது மன்னர்களின் பெருமை 17-ம் நூற்றாண்டில் மிகச் சிர் பெற்று ஓங்கி இருந்தபோது மன்னர் திருமலை நாயக்கரால் மதுரை கோபுரக் கட்டிடக் கலைக்கு இணையாக கட்டப்பட்டதாகும். இரண்டாம் பிரகாரமானது 1658-ல் மன்னர் திருமலை ரெகுநாத சேதுபதியால் தெற்குப் பகுதி பாதி பூர்த்தி செய்யப்பட்டது. முத்து விஜய ரெகுநாதத்