பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இராமர் செய்த கோயில் தேவர் (கி.பி 1712 - 1725) அவரது தகப்பனர் கடம்பத்தேவர் ஆகியோர் அம்மன் சன்னதியில் முன்புறமுள்ள மண்டபத்தையும். சில சிறிய தேவையான கட்டடங்களையும் கட்டினர். கி.பி.1742ல் முத்து விஜய ரெகுநாத சேதுபதி மூன்றாம் பிரகார வேலையைத் துவங்கினார். மையக் கருவறைகள் 15, 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மொத்தக் கோவிலின் கட்டுமானமும் முடிவுற 170 ஆண்டுகள் ஆனது. 18-ம் நூற்றாண்டின் இறுதியில் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி ஆட்சிக்காலத்தில் முடிவுற்றது. இந்துக்களின் மிக முக்கியமான புனிதத்தலமான இக்கோயில் இராமநாதபுர அரசர்களுக்குச் சொந்தமான சிறந்த வழிபாட்டுத் தலமாகும். (இராமேஸ்வரம் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரம்)