பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மன்னர்கள் திருப்பணிகளும் அறக்கொடைகளும் இதுவரை இராமேஸ்வரத்தின் புனிதத்தைப் போற்றி இராமநாத சுவாமியை தரிசித்துச் சென்றவர்களையும். இராமநாத சுவாமியின் மீது இயற்றப்பட்ட பலமொழி இலக்கியங்களைப் பற்றியும். இந்தக் கோயிலின் அமைப்பு பற்றிய விவரங்களைப் பார்த்தோம். இப்பொழுது அத்தகைய ஏற்றமான நிலைக்கு இந்த ஆலயத்தை உயர்த்தி இந்த ஆலயத்தின் அன்றாட பூஜை ஆண்டு விழாக்கள். பராமரிப்பு ஆகியவைகளை வழிவழியாக ஆன்மீகத் தொண்டுள்ளத்துடன் தொடர்ந்து பேணி வந்த இராமேஸ்வரம் அதிபதிகளைப் (சேதுபதிகளை) பற்றிப் பார்ப்போம். சேதுபதி மன்னர்களது கட்டுமானத் திருப்பணிகள் இராமேஸ்வரம் திருக்கோயில் அனைந்திந்திய அளவில் தொன்மையும் சிறப்புமிக்க ஆலயமாக இன்று கருதப்பட்டு வருகிறது. நான்கு புறங்களும் கடல் நீரினால் சூழப்பட்ட இராமேஸ்வரம் திவில் இத்தகைய இணையற்ற இறை இல்லத்தை ஏற்படுத்திக் காலமெல்லாம் அருள்மிகு இராமநாதசுவாமிக்கு அடுத்தபடியாக பக்தர்களது உள்ளங்களில் இடம் பெற்று வாழ்த்துப் பெறுபவர்கள் இந்த சேதுநாட்டின் அதிபதிகளான சேது மன்னர்கள் ஆவர். கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் ஞான சம்பந்தரும். திருநாவுக் கரசரும் இங்கு வருகை தந்து இறைவனை தேவார