பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6() இராமர் செய்த கோயில் திருப்பதிகங்களில் ஏற்றிப் போற்றிய பொழுது இந்த இறை இல்லம் ஒரு சிறு கற்றளியாக இருந்தது எனத் தெரிகிறது. ஆனால் சேது மன்னர்கள் இங்கு தங்களது கட்டுமானத் திருப்பணியை முதன் முதலில் தொடங்கியதை கி.பி. 1414, 1434 ஆம் வருடத்திய சேது மன்னர்களது கட்டுமானங்களைக் குறிப்பிடுகின்றன. சின்ன உடையான் சேதுபதி என்பவரும் அடுத்து உடையான் சேதுபதி என்பவரும் இந்தத் திருக்கோயிலின் மேலக் கோபுரத்தையும் திருச்சுற்று மதிலையும் கட்டி முடித்தனர் என்பதே அந்தக் கல்வெட்டுச் செய்திகளின் அடக்கம் ஆகும். தொடர்ந்து கி.பி. 1622க்கும் 1630 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த கூத்தன் சேதுபதி இராமேஸ்வரம் கோயிலின் கருவறையை ஒட்டிய மகாமண்டபத்தையும். அதனை அடுத்து முதலாவது பிரகாரத்தையும் நிர்மாணித்தார். இந்தத் திருப்பணிகளை உறுதிப்படுத்தும் இந்த மன்னரது கி.பி.1623 ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு முதலாவது பிரகாரத்தின் மேற்குச் சுவற்றில் அமைந்துள்ளது. இந்த மன்னரை அடுத்து சேது நாட்டின் அரியனையில் அமர்ந்த இரண்டாவது சடைக்கன் என்ற தளவாய் சேதுபதி இந்தக் கோயிலின் நுழைவாயிலில் இராஜகோபுரம் இல்லாத குறையை நீக்க அங்கு எழுநிலை கோபுரம் ஒன்றை அமைக்க அடிக்கல் நாட்டினார். ஆனால் கிபி 1639ல் சேது நாட்டின் மீது மிகப்பெரிய படையெடுப்பை மேற்கொண்ட மதுரை திருமலை நாயக்க மன்னரது பேராசையினால் தடைப்பட்டது. கிபி 1645 முதல் கிபி 1676 வரை சேதுபதி மன்னராக இருந்த ரெகுனாத திருமலை சேதுபதி இந்தக் கோயிலின் இரண்டாவது பிரகாரத்தையும் மைய மண்டபத்தையும் நிர்மாணித்து முடித்தார். இந்தப் பணிகளை தொடர்ந்து கண்காணிப்பதற் காக இந்த மன்னர் இராமேஸ்வரம் நகரில் பலகாலம் தங்கி இருந்தார். அவரது மாளிகையாக இருந்த இந்தக் கட்டுமானம்