பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 6| இன்று அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக இருந்து வருகிறது. இந்த மன்னரை அடுத்து கிபி 1713 இல் சேதுபதி மன்னரான திருவுடையாத் தேவர் என்ற முத்துவிஜய ரெகுனாத சேதுபதி இராமேஸ்வரம் திருக்கோயிலின் மூன்றாம் பிரகார கட்டுமானத்தைத் தொடக்கியவர் ஆவார். இதே மன்னர் அம்மன் சன்னதிக்கு எதிரேயுள்ள அணுக்க மண்டபத்தையும் நிர்மாணித்தார். இவரது ஆட்சிக் காலம் கிபி 1725 இல் முடிவுற்றதால் இந்த உலகப் புகழ் பெற்ற பிரகாரம் சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1772-ல் முத்து இராமலிங்க விஜய ரெகுனாத சேதுபதி என்பவரால் நிறைவு செய்யப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில். கி.பி. 1728 முதல் கி.பி.1735 வரை மன்னராக இருந்த குமார முத்துவிஜய ரெகுனாத சேதுபதி மூன்றாவது பிரகாரத்தின் வடக்கு - கிழக்கு மூலைகள் சந்திக்கின்ற இடத்தில் தில்லைக் கூத்தரான நடராஜ பெருமானுக்கு சபாபதி கோயில் என்ற அமைப்பினை நிர்மானித்தார். இவ்விதம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரதான கட்டுமானங் களைத் தவிர இன்னும் கோயிலின் மையப் பகுதியில் உள்ள சேது மாதவத் திர்த்தம் தெப்பக்குளம் போன்ற பல அமைப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இராமேஸ்வரம் திருக்கோயிலினை நூற்றாண்டு -கள் தோறும் சேதுபதி மன்னர்கள் வழி வழியாக கட்டுமானங்கள். நித்திய கட்டளைகள். ஆண்டு விழாக்கள் என்பன போன்ற பல திருப்பணிகளுக்குத் தங்களது பொருளையும். பொன்னான நேரத்தையும் செலவு செய்து வரலாற்றில் பொன்றாத புகழிடத்தைப் பெற்றுள்ளனர். தொடர்ந்து இறை உணர்வுடன் இந்தக் கோயில் திருப்பணிகளில்