பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இராமர் செய்த கோயில் ஈடுபட்டுத் தங்களது பொருளை இறை ஈடுபடுத்தி திருக்கோயிலின் புகழுக்குப் பெருமை சேர்த்த சிலரையும் இங்குத் தெரிந்து கொள்வது பொருத்தமானதாக இருக்கும். சாளுக்கிய மன்னரது திருப்பணி கி.பி. 10-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதிக்கு வருகை தந்த சாளுக்கிய மன்னனான மூன்றாவது கிருஷ்ணன் என்பவர் தமது திக் விஜயத்தின் நினைவாக சேது மூலத்தில் (தனுஷ்கோடியில்) ஒரு வெற்றித் துணையும். இராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் கண்ட மார்த்தாண்ட ஈஸ்வரருக்கு ஒரு கோயிலும் அமைத்ததாக அவரது ஹோல்காபூர் கல்வெட்டில் இருந்து தெரிய வருகிறது. ஆனால் அத்தகைய கோயிலின் சின்னம் எதுவும் இப்பொழுது காணத்தக்கதாக இல்லை. நாகூர் கோமுட்டி வணிகரது திருப்பணி அடுத்து நமக்கு கிடைக்கும் தகவல் கி.பி.15ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகூரைச் சார்ந்த கோமுட்டி வணிகர் ஒருவர் இராமேஸ்வரம் திருக்கோயிலின் மேற்கு கோபுர வாசலையும். திருச்சுற்று மதிலையும் அமைப்பதற்கு உடையான் கூத்தன் சேதுபதிக்கு உதவினார் என்பது கல்வெட்டுச் செய்தியாகும். இத்தகு திருப்பணிகளில் மதுரையில் மகாமண்டல சுவராகவும் விஜயநகர பேரரசின் பிரதிநிதி ஆகவும் மதுரையில் ஆட்சி புரிந்த விஸ்வநாத நாயக்கரும் இங்கு சில திருப்பணிகளை மேற்கொண்டு இருக்க வேண்டும் என நம்பப்பட்டு வருகிறது. அவைகளைப் பற்றிய விவரங்கள் நமக்கு கிடைக்கப் பெறவில்லை. ஆயினும் அவரது திருவுருவச் சிலை கவாமி சன்னதியில் நிறுவப்பட்டுள்ளது என்பது இதனை உறுதிப்படுத்துகிறது. கடந்த கால வரலாற்று ஏடுகளில் இராமேஸ்வரம் திருக்கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டுள்ள இவர் களைத் தவிர வேறு செய்திகள் எதுவும் கிடைக்கப்