பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 65 இலங்கை நாட்டு மன்னரது திருப்பணி கி.பி. 12ம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய அரசியல் பூசல்கள் பாண்டிய அரசின் அரசு கட்டிலுக்கு ஏற்பட்ட போட்டி ஆகியவைகளினால் கி.பி. 1169-ல் இலங்கைப் படைகள் முதன் முதலாக இராமேஸ்வரம் திவில் கரை இறங்கின. தொடர்ந்து மேற்கேயும், வடகிழக்கேயும் நடைபெற்ற பல போர்களில் பாண்டியரது இளவல் வீரபாண்டியனுக்காகப் போரிட்டார். இந்தப் படைகள் சோழ நாட்டின் தென் பகுதியான பொன்னமராவதி வரையும், பாண்டிய நாட்டின் தென் பகுதியான எதிர்க்கோட்டை வரையிலும் பரவரி நின்ற வரலாற்றை மகாவம்சம் என்ற இலங்கை வரலாற்று நூல் விவரிக்கின் 10.து. கருக்கமாகச் சொல்லப் போனால் இராமேஸ்வரம் திவு முழுவதும் கி.பி.1169 முதல் கி.பி. 1189 வரை இலங்கை மன்னரது ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இந்தக் காலக்கட்டத்தில் இலங்கை மன்னரான பராக்கிரம பாகுவின் மருகரும். கலிங்க நாட்டின் இளவரசனு மான நிசங்கமல்லன் சில காலம் இராமேஸ்வரத்தில் தங்கி இருந்தார். அப்பொழுது இன்றைய இராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் நிச்சங்கேசுரவருக்கு ஒரு கோயில் எழுப்பித்ததாக இலங்கை நாட்டின் தம்போலா என்ற இடத்தில் உள்ள சிங்கள மொழிக் கல்வெட்டும் இராமேஸ்வரம் திருக்கோயிலின் கொடிமரத்தின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள பாலி மொழிக் கல்வெட்டும் தெரிவிக்கின்றன. இந்தக் கட்டுமானமும் இன்று ജാ. திருவிதாங்கூர் மன்னர் திருப்பணி கி.பி. 1792-இல் இராமேஸ்வரத்திற்குச் சேதுயாத்திரை யாக வந்த திருவிதாங்கூர் மன்னர் சில நாட்கள் இராமேஸ்வரத் தில் தங்கியிருந்த பொழுது பயணிகளது பயன்பாட்டிற்காக இராமேஸ்வரத்தில் அன்ன சத்திரம் ஒன்றினை அமைத்துச்