பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(YS இராமர் செய்த கோயில் கொண்டு தங்களது குடிவழிகளைக் கனக் கிட்டு உறவு கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தின் பல ஊர்களில் வணிகத்தில் ஈடுபட்டுள்ள குழுக்கள் தங்களது பெயர் விகுதிகளாகச் செட்டி என்ற அடைமொழியைத் தாங்கி வருபவர்கள் என்று. தங்களை வேற்றுமைப்படுத்தி இனங்காட்டுவதற்காக இந்த மக்கள் பொதுவாகத் தங்களை நகரத்தார் என அழைத்து வருகின்றனர். நகரம் அல்லது நிகமம் என்ற வேர்ச்சொல்லியிருந்து இந்த வழக்கு ஏற்பட்டு இருத்தல் வேண்டும். கி.பி.10. 12-ம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் நகரத்தோம் என்ற சொல் பயின்று வருவதால் இவர்கள் அந்த பிரிவினரின் வழியினர் என்பது பொருத்தமாக உள்ளது. தொடக்கத்தில். குறிப்பாக ஆங்கிலேயரது ஆட்சி இந்தியாவிலும். அண்மையில் உள்ள பர்மா. மலேசியாவிலும். கி.பி.18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்டதோடு ஆங்கிலேயர் மேற்கொண்ட பல படையெடுப்புகளுக்குத் தேவையான அரிசி முதலிய உணவு வகைகளையும். பெருமளவில் வழங்கிய ஒப்பந்தக்காரர்களாகச் செயல்பட்டு பெரும் பொருள் ஈட்டியதுடன். பர்மா மலேசியா நாடுகளில் வட்டிக் கடைகள் அமைத்துச் சிறு விவசாயிகளுக்கு முன்பணம் வழங்கிப் பெருத்த ஆதாயம் சம்பாதித்தனர். இத்தகைய வட்டி ஆதாயங்களைக் கொண்டு அவர்களது குடியிருப்புகளில் மிகச் சிறப்பான வகையில் அழகிய மாட மாளிகைகளை அமைத்து வாழ்ந்து வந்ததுடன் இறை உணர்வும். தர்ம சிந்தையும். மிக்கவர்களாகப் பல அறப்பணிகளையும் மேற்கொண்டு வந்தனர். அவர்களில் ஒரு பகுதியினர் இராமேஸ்வரத்தில் பல திருப்பணிகளை இயற்றியுள்ளனர். இராமேஸ்வரம் திருக்கோயிலின் முதலாவது பிரகாரம் எப்பொழுது யாரால் அமைக்கப்பட்டது என்ற தெளிவான விவரங்கள் கோயில் ஒழுகு கிடைக்கப்பெறவில்லை என்றாலும், 5.ւ Ո.16:23 1630 வரை சேது நாட்டின் அதிபதியாக விளங்கிய இராம - 6