பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7() இராமர் செய்த கோயில் கொண்ட செட்டி நாட்டிற்கு அண்ணாமலைச் செட்டியார். செட்டிநாடு அரசர் எனவும். அவரது உறவினரான பெத்தாட்சி செட்டியார் மருங்காபுரி ஜமீன்தார் என வழங்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கோயில் திருப்பணிக்கு அன்றைய நகரத்தார் மக்கள் அன்புடன் அளித்த 5 லட்சம் ரூபாய்களுடன் தேவகோட்டை ஜமீன்தார் இராமசாமி செட்டியார் தமது சொந்த நன்கொடை தொகையான ரூ.2/- லட்சத்தையும் சேர்ந்து இந்தத் திருப்பணிகளுக்கு செலவழிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தக் கோயிலில் முதலாவது பிரகாரம் கருங்கல் துண்களுடன் செம்மை செய்யப்பட்டு அம்பாள் சன்னதி மண்டபமும் அழகுற அமைக்கப்பட்டது. இன்னும் தளவாய் சடைக்கன் சேதுபதி மன்னரால் தொடங்கப் பெற்று ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளாக நிறைவு செய்யப்படாமல் இருந்த திருக்கோயிலின் கிழக்கே உள்ள இராஜ கோபுரத்தின் மேற்பககியம். திகப்பணி செய்யப்பட்டது.