பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இராமர் செய்த கோயில் மேலும் ஏ.எல்.ஏ.ஆர். குடும்பத்தினரும் ஏ.எ ல்.ஏ.ஆர்.பி. குடும்பத்தினரும் ஓ.ஆர்.எம்.எம்.எஸ். குடும்பத்தினரும் இந்தத் திருப்பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயல்பாகவே இறை உணர்வு மிக்கவர்களாக இந்த நகரத்தார்கள் காசி முதல் கன்னியாகுமரி வரையாக திருத்தலங்களில் ஆன்மீக உள்ளம் படைத்த மக்களுக்காகத் தங்கும் விடுதிகளையும் அன்ன சத்திரங்களையும் தொடர்ந்து நடத்தி வருவது போன்று இராமேஸ்வரம் தளத்திலும் அடுத்துள்ள தனுஷ்கோடியிலும் அன்ன சத்திரங்களை நிறுவி நடத்தி வருகின்றனர். இவை தவிர நகரத்தார்களின் இராமேஸ்வரம் கோயில் திருப்பணிகளாகக் கிழக்கண்டவை களையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும். 1) துவாதசி நாள் அன்னதானம் பிரதி மாதமும், துவாதசி நாள் அன்று கோட்டையூர். வெ.சி..அ.ராம குடும்பத்தினரும் கிழப்பூங்குடி சு.க.வயி. குடும்பத்தாரும் அன்னதானம் செய்து வருகின்றனர். 2) நந்தவனத் திருப்பணி இராமேஸ்வரம் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இராமநாத சுவாமி பர்வத வர்த்தினி அம்பாள் ஆகியோரது அன்றாடபூஜைகளுக்கும் விழாக்களுக்கும் உரிய மலர்களை வழங்குவதற்காக நகரத்தார்கள் இங்கு மூன்று நந்தவனங்களை எற்படுத்திப் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். முதலாவது நந்தவனம் இராமேஸ்வரம் கிழக்குத் தெருவில் கொத்தமங்கலம் பா.சி.கா. குடும்பத்தாரும், தெற்குத் தெருவில் உள்ள நந்தவனம் கொத்தமங்கலம் சி.வி.சி. சின்னக் கருப்பர் செட்டியார் குடும்பத்தாரும் நிர்வகித்து வருகின்றனர். முன்றாவது பெரிய நந்தவனம் வடக்குத் தெருவில் சோழபுரம் . அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் குடும்பத்தா