பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழாக்களும் நகரத்தார்களும் இராமேஸ்வரம் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி தை. மாசி மாதங்களில் சிறப்பான முறையில் திருவிழாக்கள் பல ஆண்டுகளாக நடைபெறுவதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இந்த விழாக்களின் போது நகரத்தார்களின் இதயப் பூர்வமான தொண்டும் நடைபெற்று வருவதையும் இங்குக் குறிப்பிடுதல் பொருத்தமானதாகும். ஆடித் திருவிழாவின் போது வெள்ளி ரத மண்டகப் படியை கண்டனு எஸ்.என்.வி.ஆர்.எஸ். வீரப்ப செட்டியார் குடும்பத்தார் பெரும் பொருட் செலவில் நடத்தி வருகிறார்கள். ஆடித்திருவிழாவின் போது கண்டனுார் அ.பெ.சி.த.நா. ாமநாதன் செட் டியார் குடும்பத்தாரும் சிறப்பான நிகழ்ச்சிகளை மேற்கொண்டு நடத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் திருக்கோயிலில் இறைவன் இறைவரிக்குக் கங்காபிஷேகம் நடைபெறுவதற்கு இராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். மாசி மாதத்தில் மகா சிவராத்திரி விழா இராமேஸ்வரம் திருக்கோவிலில் மிகவும் சிறப்பானதாக நடைபெறுகின்றது. இந்த விழாவினைக் கண்டு களிக்க வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். இந்த விழாவின் சிறப்பு அம்சங்களாக ருத்ரா அபிஷேகம். சகஸ்ர நாம அர்ச்சனை. பஞ்சாமிர்த அபிஷேகம், உப அபிஷேகம் ஆகியன நடைபெற்று வருகின்றன. இந்தத் திருத்தொண்டினைக் கோட்டையூர் அ.க.அ.சித.வெ.சித. அழகப்பன் செட்டியார் குடும்பத்தினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர். சுவாமிக்கு