பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - II கோயில் நடைமுறைகள் 1) தினசரி நடைமுறைகள் இராமேசுவரம் திருக்கோயிலில் நாள்தோறும் வைகறையில் இருந்து நடுநிசி வரை. பூஜை. அபிஷேகம். நைவேத்தியம், திபம், துபம் எனப்பல வகைப்பட்ட சடங்குகள் ஆகம முறைப்படி நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக இந்தக் கோவிலில் இந்த சேவைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் மராட்டா குருக்கள் என வழங்கப்படும் மகாராஷ்ட்ரா பிராமணர்கள் ஸ்தானிகம். பூஜை, பரிசாரகம் என்ற முதன்மையான மூன்று சேவைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவர்கள் தாம். இந்தக் குருக்கள் மார்களது கோயில் நடைமுறைகள் வடமாநிலங்களில் உள்ள கோவில்களில் அனுசரிக்கப்படு பவைகளில் இருந்து வேறானதாக இருந்து வருகின்றன. பொதுவாகத் திருக்கோயிலில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை அங்கு பணியாற்றும் பணியாளர்கள் குறித்து வைத்து வந்தனர். இதனை க் கொண்டு கோவில் பற்றிய அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இருந்தது. இந்தப் பதிவுப் புத்தகம் ஒழுகு அல்லது ஒழுகுக் கணக்கு என அழைக்கப்பட்டு வந்தது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள புராதான கோயில்களான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் கைலாசநாதர், திருக்கோயில், சிதம்பரம் நடராஜ பெருமாள் ஆலயம். பூரீ ரங்கம் ரங்கநாதர் திருக்கோவில்