பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 77 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகிய ஆலயங்களில் இந்த ஒழுகுகள் பல நூற்றாண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த ஒழுகுக் கணக்குகள் சேதுபதி மன்னர்களே து ஆட்சியில் அமைந்த இராமேஸ்வரம். திருப்புல்லானி. திருஉத்திர கோசமங்கை, திருவாடானை திருக்கோவர்ட்டியூர், காளையார்கோவில், திருக்கொடுங்குன்றம். ஆகிய ஆலயங்களிலும் கி.பி.19 ம் நூற்றாண்டு வரை பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால் அவைகளில் ஒன்று கூட இன்று நமக்கு கிடைப்பதாக இல்லை. இராமேஸ்வரம் திருக்கோயிலைப் பொறுத்த மட்டில் இந்த ஒழுகு கிடைப்பதற்கு அரிதாகிவிட்டதால் இந்தக் கோயிலின் பூசனை விழாக்களை கல்வெட்டுக்கள். செப்பேடுகள் மற்றும் சில ஆவனங்கள் ஆகியவைகளைக் கொண்டு இங்கு தொகுக்கப் பட்டுள்ளது. சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோவிலில் வைகறையில் தொடங்கி நடைபெற்ற ஒருநாள் நிகழ்ச்சி விவரங்களைக் கொண்ட ஆவணம் ஒன்று கூறுகிறது.' இதன் சுருக்கத்தை இப்பொழுது பார்ப்போம். காலை விடியல் தொடங்கும் நாலரை மணி அளவில் பண்டாரம் ஒருவர் அனுமார் ஆலயத்தின் கிழக்கு முகப்பிற்கு வந்து மூன்று முறை சங்கை ஊதுகிறார். பிறகு அங்கிருந்து கிழக்கு வாசலுக்கும் மேற்கு வாசலுக்கும் சென்று தொடர்ந்து சேகண்டியை ஒலிக்கிறார். சில சமயங்களில் ஆலயத்திற்கு வெளியிலும் கடற்கரைக்கு சென்று வருவதும் உண்டு. அப்பொழுது மேளக்காரர்கள். இசைக் குழுவினர் வருகின்றனர். நகரா. தவில், நாதசுரம், ஒத்து. கைத்தாளம், எக்காளம் ஆகியவைகளை அனுமார் கோ வரில் சன்னதியில் இசைக்கின்றனர். கோயில் ஸ்தானிகர். பட்டர் குருக்கள். சதிர்க்காரி (முறைகாரி) கோயில் சிப்பந்திகள் ஆகியோர்களும்