பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§[] இராமர் செய்த கோயில் வந்த கோடி திர் ததத்தில் நனைந்த சந்தனத்தை பட்டர் லிங்கத்தின் மீதும் பீடத்திலும் தேய்த்துக் கோடி திர்த்தத்தைக் கொட்டி நீராட்டுகிறார். அடுத்து பல்வேறு புனித திர்த்தங்களும் நீராட்டிற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஸ்தானிகா அர்த்த மண்டபத்து திரையை இறக்கி. கருவறையை மறைத்த பிறகு, ஒரு துாய்மையான துணியைப் பட்டரிடம் கொடுக்கிறார். அதைக் கொண்டு அவர் லிங்கத்தை ாரம் போகத் துடைக்கிறார். பிறகு அந்த லிங்கத்தை வஸ்திரம், உபவஸ்திரம் என்ற இரு துண்டுத் துணிகளால் லிங்கத்தின் (பன்னாலும், இடையிலுமாக சுற்றிக் கட்டுகிறார். சந்தனப் பொடி உள்ள பரிக்கலத்தில் இரண்டாவது நான்காவது விரல்களை அமுக்கி எடுத்து அதைக் கொண்டு லிங்கத்தின் முன் பகுதியில் மூன்று சமகோடுகள் ஏற்படும்படி செய்கிறார். அடுத்து அந்தக் கோடுகளுக்கு இடையில் ஒரு திலகமும் வைத்து அதன் மீது ஒரு மலர் மாலையைச் சூட்டி. மூன்று வில்வ இலைகளையும் வைக்கிறார். ஆறுமணி அளவில், ஒரு ஸ்தானிகர் நாதசுரம் முழங்க. திருவமுது. அப்பம், கறிகள் ஒரு மனிதர் சாப்பிடுவதற்குக் கடுதலான அளவில் கொண்டு கருவறை வாசலில் வைக்கிறார். பட்டர் சில மந்திரங்களைச் சொல்லிய பிறகு சில துளி திர்த்தத்தை அவைகளின் மீது தெளிக்கிறார். தரையிலும் முன்று முறை தெளிக்கிறார். அத்யான பட்டர். வில்வ இலையை கையில் வைத்து அசைத்தவாறு அர்க்கியம். பத்யம் எனச் செய்கிறார். மீண்டும் மூன்று முறை திர்த்தத்தைத் தரையில் தெளித்தவுடன் வாசல் திரை நீக்கப்படுகிறது. அடுத்து ஒரு ஸ்தானிகர். பட்டர் கையில் ஒரு திபத்தைக் கொடுத்ததும். சூடத்தை அதில் வைத்துக் கொளுத்தி அதனை மேலும் கிழுமாக பிறகு மூன்று முறை லிங்கத்தைச் சுற்றியும் மேலும் கிழுமாக ஒரு தரம் அசைக்கிறார். மற்றுமொரு