பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii


இத்தனைக் கொலைகளும், ஏனைய கொடுமைகளும் நாடோறும் நிகழ்கின்றன. வள்ளற் பெருமானின் பெருமைகளையும் அவரது கொள்கைகள் பற்றிய அவசரமும் அவசியமும் நாடெங்கும் பரப்பப்படுதல் வேண்டும். இதற்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன்.

வள்ளற்பெருமான் சென்னையில் ஏழுகிணறு பகுதியில் உள்ள வீராசாமிப் பிள்ளைத் தெருவில் 33 ஆண்டுகள் வாழ்ந்தார். அப்போது அதே தெருவில் வாழ்ந்த திருமழிசை முத்துச்சாமி முதலியார் என்பவர் அவருக்கு நண்பனாகவும் சீடனாகவும் பழகி வந்தார். அப்போது இவர் பாடிய சில தோத்திரப் பாடல்களை வள்ளற்பெருமானிடம் காட்டி, சாற்றுக்கவி பெற்றுள்ளார். அந்த சாற்றுக்கவியில் வள்ளலார் இவரை “முத்துச்சாமிக் கவிக்குரிசில்” என்று குறிப்பிடுகிறார்.

சிலகாலம் கழித்து வள்ளலார் வடலூருக்குச் சென்ற பிறகு முத்துசாமிக்கு திருமணம் நிச்சயமாகிறது. அதற்கு வள்ளலார் வரவேண்டும் என்று பெரிதும் விழைகிறார். ஆனால், வள்ளலாரோ திருமணம் முதலிய விழாக்களில் கலந்துகொள்ளும் நிலையில் அப்போது இல்லை. தன்னால் வர இயலவில்லை என்ற செய்தி யினை, 412 அடிகள் கொண்ட நிலைமண்டில ஆசிரியப்பாவாக எழுதி, தனது நண்பர் கொந்தமூர் சீனிவாச வரதாச்சாரியார் மூலமாக, நேரில் கொடுக்குமாறு அனுப்புகிறார். இதில் முத்துசாமியை “மூதறிவாளன் முத்துசாமி” என்று குறிப்பிட்டு, இதனை “இராமலிங்கம் எழுதி விடுத்த மயலுரு சோபான வாசகம்” என்று கூறுகிறார். இப்பாடல் திருஅருட்பா - ஆறாம் திருமுறை - ஊரன் அடிகள் பதிப்பில் (பக்.1099 - 1010) காணப்படுகிறது. ‘குடும்ப கோரம்’ என்ற தலைப்பு யார் கொடுத்தது என்பது தெரியவில்லை.

‘குடும்ப கோரம்’ என்ற பாடல், சைவ சித்தாந்தக் கருத்துகள் நிரம்பிய உருவகக் கதையாக உள்ளது. அதன் சுருக்கம்:-

என் பெயர் ‘ஏழை’. எனது முதல் மனைவி ‘ஆணவம்’. அவளது மகன் ‘அஞ்ஞாமை’. இரண்டாவது மனைவி ‘மாயை’. இவள் பெற்ற பிள்ளைகள் நால்வர். மனம், புத்தி, சித்தம்,