பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霧 82 蠍 இராமலிங்க அடிகள் ஒவ்வொரு பாடலிலும் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து... ஓம்சிவ சண்முக சிவஒம் ஓம்சிவாய என்று உன்னுதி மனனே' என்ற தொடர்கள் உயிர் போல் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். 24. திருவருள் வழங்க விளக்கம்: திருவொற்றியூர் பற்றிய இப்பதிகம் கட்டளைக் கலித்துறை யாப்பினால் அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடலிலும் அடிகள் தம் கடவுள் யார் என உறுதிப்படுத்துகின்றார். தோடுடை யார்புலித் தோலுண்ட யார்கடல் தாங்கும்.ஒரு மாடுடை யார்மழு மான்உடை. யார்பிர மன்தலையாம் ஒடுடை யார்ஒற்றி யூர்உடை யார்புகழ் ஓங்கியவெண் காடுடை யார்நெற்றிக் கண்உடை யார்எம் கடவுளரே (1) ஏனப் பரிசெஞ் சடைமுத லானஎல் லாம்மறைத்துச் சேணப் பரிகள் நடத்திடு கின்றநல் சேவகன்போல் மாணப் பரிபவம் நீக்கிய மாணிக்க வாசகர்க்காய்க் காணப் பரிமிசை வந்தன ரால்எம் கடவுளரே (7) என்பவை இரண்டு பாடல்கள். ஈண்டுக் காட்டிய இரண் டாம் பாடலில் மாணிக்கவாசகர் பற்றிய வரலாற்றுக் குறிப்பு இருப்பதுபோல் ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒரு வரலாற்றுக் குறுப்பைத் தாங்கி நின்று பாடலுக்குச் சுவையூட்டி நிற்கின்றது. இவற்றால் அடிகளாரின் சைவ இலக்கியப் புலமை புலனாகின்றது.