பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 篆 83 掌 28. நாள் அவத்து அலைசல்: இப்பதிகத்தில் அடங் கிய பத்துப் பாடல்களும் எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. ஒவ்வொரு பாடலும் யாக்கை நிலையாமையைக் குறிப்பிட்டு விரைவில் தமக் குத் திருவருள் பாலிக்குமாறு இறைவனை இறைஞ்சு கின்றார். இதுவும் ஒற்றியூர்த் தலம்பற்றிய பதிகமே. இன்றிருந் தவரை நாளைஇவ் வுலகில் இருந்திடக் கண்டிலேம் ஆஆ. என்றிருந் தவத்தோர் அரற்றுகின்றனரால் ஏழையேன் உண்டுடுத்து அவமே சென்றிருந் துறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ மன்றிருந் தோங்கும் மணிச்சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே (1) நீரின்மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து நிலைபடா உடம்பினை ஒம்பிப் பாரின்மேல் அலையும் பாவியேன் தனக்குப் பரிந்தருள் பாலியாய் என்னில் காரின்மேல் வரல்போல் கடாமிசை வரும்அக் காலன்வந் திடில்எது செய்வேன் வாரின்மேல் வளரும் திருமுலை மலையாள் மணாளனே ஒற்றியூர் வாழ்வே (3) என்பவை இப்பதிகத்தின் இரண்டு பாடல்கள். எல்லாப் பாடல்களும் ஒற்றியூர் வாழ்வே' என்று முடிகின்றன. 33. ஆனந்தப் பதிகம்: பதினொரு பாடல்கள் கொண்ட இப்பதிகம் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பினால் இயன்றது. ஒற்றியூர் எம்பெரு மான் தம்மைத் திருத்தலத்திற்கு வரச் செய்த திருவருளுக் குப் பேரானந்தம் அடைந்து தாம் என்ன கைம்மாறு செய்ய முடியும் என மனம் இரங்கிப் பேசுகிறார். இதில் மூன்று பாடல்களைக் காட்டுவேன்.