பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豪 84 露 இராமலிங்க அடிகள் சாதல் பிறத்தல் எனும்கடலில் தாழ்ந்து கரைகா னதழுந்தி ஈதல் இரக்கம் என்அளவும் இல்லா தலையும் என்றனைநீ ஒதல் அறிவித் துணர்வறிவித் - தொற்றி யூர்ச்சென்றுனைப்பாடக் காதல் அறிவித் தாண்டதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே (2) பாவம் எனும்ஒர் பெருஞ்சரக்குப் பையை எடுத்துப் பண்பறியாக் கோவம் எனும்ஒர் குரங்காட்டும் கொடியோன் தன்னைப் பொருட்படுத்தித் தேவர் அமுதே சிவனேதின் திருத்தாள் ஏத்த ஒற்றிஎனும் காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே (7) புண்ணும் வழும்பும் புலால்நீரும் புழுவும் பொதிந்த பொதிபோல நண்ணும் கொடிய நடைமனையை நான்என்றுளறும் நாயேனை உண்ணும் அமுதே நீஅமர்ந்த ஒற்றி யூர்க்கண் டென்மனமும் கண்ணும் களிக்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே (10) எல்லாப் பாடல்களும் "கைம்மாறு அறியேன் கடை யேனே என்று முடிகின்றன. 37. நற்றுணை விளக்கம்: பத்துப் பாடல்கள் கொண்ட இப்பதிகம் நாம் பெறும் துணை நமச்சிவாயம் காண் என்று விளக்குகின்றது. பாடல்கள் யாவும் எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தயாப்பால் இயன்