பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 家 85 拳 றவை. நெஞ்சை நோக்கி அடிகள் அறிவுறுத்துவதாக அமைகின்றது பதிகம். எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால் இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீ அஞ்ச வேண்டிய தென்ன்ைஎன் நெஞ்சே அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும் விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்கண் அமுதா நஞ்சை வேண்டிய நாதன்தன் நாமம் நமச்சி வாயகாண் நாம்பெறும் துணையே (1) மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான் மற்றை வானவர் முற்றிலும் அழிவார் ஏலும் நற்றுனை யார்நமக் கென்றே. எண்ணி நிற்றியோ ஏழைநீ நெஞ்சே கோலும் ஆயிரம் கோடிஅண் டங்கள் குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும் நாலு மாமறைப் பரம்பொருள் நாமம் நமச்சி வாயகாண் நாம்பெறும் துணையே (7) என்பவை இப்பதிகத்தின் இரண்டு பாடல்கள். 'நமச்சி வாயவே நாம் பெறும் துணையே’ என்று பாடல்கள் யாவும் முடிவுறுகின்றன. 'நாம் என்பது உளப்பாட்டுத் தன்மை. நெஞ்சை தம்முடன் இணைத்துக் கொள் வதைக் காட்டுவது. இப்பதிகமும் திருவொற்றியூர் இறை வனை நாடுவதாக அமைந்தது. - - - 40. அவலத் தழுங்கல்: திருவொற்றியூர் எம்பெரு மான் சந்நிதிமுன் அடிகள் தம் அவல நிலையை நினைந்து நினைந்து அழுங்குவதைக் காட்டுவது. பாடல் கள் யாவும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை.