பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 86 蠍 இராமலிங்க அடிகள் ஊதி யம்பெறா ஒதியனேன் மதிபோய் உழலும் பாவியேன் உண்மைஒன்றறியேன் வாதி யம்புறும் வஞ்சகர் உடனே வாய்இ முக்குற உண்மைகள் பேசி ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன் அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில் நீதி யம்பிய நஞ்சமும் கலங்கும் ‘. . . . . நிகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே (1) காயம் என்பதா காயம்என்றறியேன் கலங்கி னேன்.ஒரு கலைகனும் இல்லேன் சேய நன்னெறி அணித்தெனக் காட்டும் தெய்வ நின்னருள் திறம்சிறி தடையேன் தூய நின்அடி யவருடன் கூடித் தொழும்பு கொள்வதே சுகம்எனத் துணியேன் திய னேன்தனை ஆள்வதெவ் வாறோ திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே (8) என்பவை இப்பதிகத்தின் இரண்டு பாடல்கள். எல்லாப் பாடல்களும் திகழும் ஒற்றியூர்த் தியாக மாமணியே’ என்று இறைவனை விளித்து தம் அவல நிலையைப் புலப்படுத்திப் புலம்புவன. - 45. வழிமொழி விண்ணப்பம்: இப்பதிகம் திருவொற் றியூர்த் தியாக மணியையும் தில்லை அம்பல வனையும் ஒருசேர விளித்துத் தம்மைத் தவிர்க்காது ஆட்கொள்ளு மாறு இறைஞ்சுவதாக அமைந்தது. பாடல்கள் யாவும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. கழிவிரக்கத்தைக் காட்டுபவை. இதில் மூன்று பாடல்களைக் காட்டுவேன். நீல னேன்கொடும் பொய்யல துரையா நீசன் என்பதென் நெஞ்சறிந்ததுகாண்