பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 零 87 梁 சால ஆயினும் நின்கழல் அடிக்கே சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ ஆலம் உண்டநின் தன்மைமாறுவதேல் அகில கோடியும் அழிந்திடும் அன்றே சில மேவிய ஒற்றியம் பரனே - தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே (1) நல்லன் அல்லனான் ஆயினும் சிறியேன் நான்அறிந்ததோ நாடறிந் ததுகாண் சொல்ல வாயிலை ஆயினும் எனைநீ தொழும்பு கொண்டிடில் துய்யனும் ஆவேன் வல்ல உன்கருத் தறிந்திலேன் மனமே மயங்கு நின்றதியான் வாடுகின்றனன்காண் செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே - தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே (3) உய்ய ஒன்றிலேன் பொய்யன்என் பதனை ஒளித்தி லேன்இந்த ஒதியனுக் கருள்நீ செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே செய்வ தென்னைநான் திகைப்பதை அன்றி மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை மறந்தி லேன்.இது வஞ்சமும் அன்றே செய்ய மேனிஎம் ஒற்றியூர் வாழ்வே - திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே (8) எல்லாப் பாடல்களும் ஒருவாறு 'ஒற்றியூர் அரசே, தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே’ என்று முடிவுறு வனவாக அமைந்தவை. - இப்பதிக விண்ணப்பத்தை தொடர்ந்து சிறுமை விண்ணப்பம் (46), ஆற்றா விண்ணப்பம் (47), இரங் கல் விண்ணப்பம் (49), ஈதல் விண்ணப்பம் (52), பொருள் விண்ணப்பம் (53), திருவண்ண விண்ணப் பம் (54), நாடக விண்ணப்பம் (55), கொடி விண்ணப்