பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 霹 89 家 என்பவை இவற்றின் மூன்று பாடல்கள். பாடல்களில் ஆழங்கால்பட்டு அநுபவிக்கும்போது உண்மையில் சிவானந்தத் தேனின் சுவையை உணர முடிகின்றது. 52. காதல் விண்ணப்பம் அகத்துறை போல் காட்சி அளிக்கும் இப்பதிகம் அகத்துறையின்பாற் பட்ட தன்று. ஈண்டுக் காதல் 'பக்தி' என்னும் பொருளில் அமைந்துள்ளது. இது திருவொற்றியூர் எம்பெருமானை நோக்கி விண்ணப்பிப்பது. எழுசீர்க் கழிநெடிலடி ஆசி ரிய விருத்த யாப்பில் நடைபெறுவது. அடிகளின் பக்திப் பெருக்கு எம்பெருமான் மீது கரை புரண்டோடு கின்றது இப்பதிகத்தில். , . . . . . . வஞ்சக வினைக்கோர் கொள்கலம் அனைய மனத்தினேன் அனைத்தினும் கொடியேன் தஞ்சம்என் றடைந்தே நின்திருக் கோயில் சந்நிதி முன்னர்நிற் கின்றேன் . எஞ்சலில் அடங்காப் பாவிஎன் றெனைநீ இகழ்ந்திடில் என்செய்வேன் சிவனே கஞ்சன்மால் புகழும் ஒற்றியங் கரும்பே கதிதரும் கருணையங் கடலே (1) ஞானம்என் பதிலோர் அனுத்துணை யேனும் நண்ணிலேன் புண்ணியம் அறியேன் ஈனம்என் பதனுக் கிறைஎனல் ஆனேன் எவ்வனம் உய்குவ தறியேன் வானநா டவரும் பெறற்கரு நினது மலரடித் தொழும்புசெய் வேனோ காணவேட் டுருவாம் ஒருவனே ஒற்றிக் கடவுளே கருனையங் கடலே (6) மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்துல குயிர்தொறும் ஒளித்த