பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豪 92 够 இராமலிங்க அடிகள் கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை எண்ணும் கணமும்விடுத் தேகாத இன்னமுதே உண்ணும் உணவுக்கும் உடைக்கும்முயன் றோடுகின்ற மண்ணுலகத் தென்றன் மயக்கறுத்தால் ஆகாதோ (10) என்பன நான்கு பாடல்கள். இப்பாடல்களில் அடிகளா ரின் இந்த ஏக்கத்தைக் காணலாம். பாடல்களைப் படித்து அவற்றில் ஆழங்கால் படும்போது நம்மிடமும் அந்த ஏக்கம் எழுவதையும் உணர முடிகின்றது. . 61. பழமொழி மேல் வைத்துப் பரிவு கூர்தல்: திருஒற்றி யூர்ப் பெருமான்மீது பாடிய பத்துப் பாடல்களைக் கொண்டது. இப்பதிகம். பாடல்கள் யாவும் எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தத்தாலானவை. ஒவ்வொரு பாடலும் ஒரு பழமொழியைத் தன்னகத்தே கொண்டது. - - w முதல்இ லாமல் ஊ தியம்பெற விழையும் மூடன் என்னநின் மொய்கழல் பதமேத் துதல்இ லாதுநின் அருள்பெற விழைந்தேன் துட்ட னேன்.அருட் சுகம்பெறு வேனோ துதலில் ஆர்அழல் கண்ணுடை யவனே. நோக்கும் அன்பர்கள் தேக்கும்இன் அமுதே சிதல்இ லாவளம் ஓங்கிஎந் நாளும் திகழும் ஒற்றியூர்த் தியாகநாயகனே (7) என்பது ஏழாம் பாடல். முதல் அடியில் முதல் இலார்க்கு ஊதியம் இல்லை என்ற பழமொழி இதில் அமைந்திருத் தல் காணலாம். - - - - - - நீர்சென ரித்தொளி விளக்கெரிப் பவன்போல் நித்தம் நின்னிடை நேசம்வைத் திடுவான் 2. திருமங்கையாழ்வாரின் பழமொழியால் பணிந்துரைத்த பட்டு (பெரி. திரு.10.9) இப்பதிகத்துடன் ஒப்பிடல் தகும்.