பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑 94 够 இராமலிங்க அடிகள் யாவும் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே’ என்று முடிவுபெறுகின்றன. இறைவனுடன் தம்மைச் சேர்த் துக் கொள்ளுமாறு வேண்டுகின்றார். இப்பதிகத்தை அடுத்து இரங்கல் தலைப்புகள் பல அமைகின்றன. கருணை பெறாதிரங்கல் (67), அர்ப்பித்திரங்கல் (68), கழிபகற்கிரங்கல் (69) என்பன காண்க. 70. தரிசனப் பதிகம்: இது கோயில்’ என்று சைவர்க ளால் வழங்கப்பெறும் சிதம்பரத்தைப்பற்றியது. பாடல் களனைத்தும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. "சிதம்பரம் போகாமல் இருப் பேனோ என்று நந்தனார் ஏங்கினதைப்போல, அடிகள் அம்பலவாணனை ஒருசமயமேனும் காணவேண்டும் என்று துடிக்கின்றார். - தாயிற் பெரிய கருணையினார். தலைமாலையினார் தாழ்சடையார் வாயிற் கினிய புகழுடைய வள்ளல் அவர்தந் திருஅழகைக் கோயிற் கருகே சென்றுமணம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன் ஈயில் சிறியேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ (3) அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமாள்.அடிகள்தமைத் தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன் மருளே வடிவேன். ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன் இருளேர் மனத்தேன் அவர்தன்மநான் இன்னும் ஒருகால் காண்பேனோ (8) என்பன இப்பதிகத்தின் இரண்டு பாடல்கள். பாடல்கள்