பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 器 97 梁 கனமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே குணமொன்றி லேன்னது செய்கேன்நின் உள்ளக் குறிப்பறியேன் பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில் தெய்வ மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே (6.1) பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன் மத்தர்தம் வாம் மயிலே வடிவுடை மாணிக்கமே (33) வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள் வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர் வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்தரும்நீ வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே (101) பாடல்கள் யாவும் குழைவுடையனவாய் நெஞ்சு நெகிழ்வுடையனவாய் மகன் ஒருவன் தன் தாயிடம் முறையிடும் பான்மையனவாய் பயில்தொறும் பாடிய வாய் தேனூறும் பெற்றியனவாய்த் திகழ்வதைக் கண்டு மகிழலாம். பாடல்கள் அனைத்தையும் பயின்று துய்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை எழுப்புவதையும் அறிய SU sf LD . இராம.-8