பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹 1QO 掌 இராமலிங்க அடிகள் ஒல்லார் புரமூன் றெரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும் நல்லார் வல்லார் அவர்முன்போய் தாராய் இன்று நவிற்றுதியே அல்லார் குழலாள் கண்ணர்ாம் - ஆற்றில் அலைந்தாள் அனங்கனையார் பல்லார் சூழ்ந்து பழிதாற்றப் - - படுத்தாள் விடுத்தாள் பாயல்என்றே (5) வேலை விடத்தை மிடற்றணிந்த வெண்ணிற் றழகர் விண்ணளவும் சோலை மருவும் ஒற்றியிற்போய்ச் சுகங்கள் அவர்முன் சொல்லரோ மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள் காலை அறியாள் பகல்அறியாள் கங்குல் அறியாள் கனிந்தென்றே (8) ஆழ்வார் பாசுரங்களில் அகத்துறையிலமைந்த தூது பற்றிய பாசுரங்கள் மிகுபுகழ் பெற்றவை. தலைவி யின் காதலைப் பளிங்குபோல் காட்டுபவை. அங்ங் னமே அடிகளாரின் துதுப் பாடல்களும் நம் உள்ளத்தை உருக்குகின்றன. நம்மையும் தலைவி நிலைக்குத் தள்ளு கின்றன. 80. திருவுலாவியப்பு: திருஒற்றியூர் பெருமான் உலா வைக் கண்டு களித்த நங்கையின் மனம் பரிபக்குவம டைந்து பெருமான்பால் சென்று விட்டதாக வியக்கும் நிலையை விரித்துரைப்பது இப்பதிகம். பாடல்கள் யாவும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. படிப்போரையும் வியக்கச் செய்து அவர் தம் உள்ளத்தை உருக்குபவை.