பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X எனவேதான், எனது எண்பதாவது வயதிலும், சைவத்திற்கும் சன்மார்க்கத்திற்கும் என்னாலான பணிகளைச் செய்து வருகிறேன். திருமூலரும், மாணிக்க வாசகரும் கூறிய சன்மார்க்கம் (சைவம் கூறும் நான்கு மார்க்கங்களில் நான்காவதாகியது சன் மார்க்கம்) தான் பரிணாம வளர்ச்சியினால் வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கமாக விளக்கம் பெற்றது என்பதனை சைவ உலகமும் சன்மார்க்க உலகமும் உணரும் காலம் அண்மையில் தான் இருக்கிறது என்று நம்புகிறேன். “அருட்பெருஞ் ஜோதி, அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ் ஜோதி” என்னும் மகாமந்திரம் வள்ளற் பெருமானால் திருவாசகத்தில் இருந்துதான் எடுக்கப் பெற்றது என்பதும், அவர் திருமந்திரத் தினை தாம் போற்றும் சாத்திர நூலாகவும், திருவாசகத்தினை தோத்திர நூலாகவும் கொண்டு வழிபட்டார் என்பதும் யாவரும் அறிய வேண்டிய உண்மையாகும். இதற்கும் பேராசிரியர் டாக்டர் ந.சுப்புரெட்டியார் இயற்றி யுள்ள இந்நூல் பெரிதும் துணைபுரியும். இதனைப் பொறுமையு டன் படித்தால் வள்ளற் பெருமானின் திருவுள்ளம் தெளிவாக விளங்கும். சென்னை 25.8.20G3 சி.எஸ்.குப்புராஜ்