பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக் கழல்இணை நினைந்துநின் கருணை வெள்ளம்,உண் டிரவு பகல்அறி யாத வீட்டினில் இருந்துநின் னோடும் வள்ளல்இல் லாமல் கலப்பனோ சித்தி விநாயக விக்கினேச் சுரனே' சங்கம் வளர்த் திடவளர்ந்த தமிழ்க்கொடியைச் சரச்சுவதி. தன்னை அன்பர் துங்கமுறக் கலை பயிற்றி உணர்வளிக்கும் கலைஞானத் தோகை தன்னைத் திங்கள்துதல் திருவை.அருட் குருவைமலர் ஓங்கியபெண் தெய்வந் தன்னைத் தங்கமலை முலையாளைக் கலையாளைத் தொழுதுபுகழ் சாற்று கிற்பாம்." ஆற்று நீர்வழிப் படுஉம் புனைபோல முறைவழிப்படுஉம் ஆருயிர் (புறம்-192) ஆதலால் என் வாழ்வின் நடுப்பகுதியில் சைவத் திருமுறைகள்பற்றியும் ஆழ்வார்களின் அருளிச் செயல் கள் பற்றியும் சில விளக்க நூல்கள் எழுதி வெளியிடும் பேறு பெற்றேன். என் வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் பிற்கால அருளாசிரியர்கள்பற்றி எழுதி வெளியிடும் பேறு இருந்தமையால் தாயுமானவர்பற்றி எழுதவும் அதனைக் கலைஞன் பதிப்பகம் மூலம் வெளியிடவும் திருவருள் கூட்டியது. இதனைத் தொடர்ந்து 'இராமலிங்க அடிகள் பற்றி எழுதவும் அதே பதிப்பகம் மூலம் வெளிவரவும் திருவருள் கூட்டுகிறது. தொடர்ந்து பட்டினத்தடி கள், இராமாநுசர், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள்பற்றி எழுதவும் வெளியிடவும் திருவருள் கூட்டுவிக் கும் என்ற நம்பிக்கை உண்டு. 1. திருவருட்யா - மூன்.திரு. சித்திவிநாயகர் பதிகம் - 4 2. மேலது.- மேலது கலைமகள் வாழ்த்து -2