பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் ※ 113 發 சேர்என்றுரைத்தால் அன்றி.அவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ யார்என்றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ (4) வில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்குழ் தில்லை நகரார் ஒற்றியுளர் * சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால் ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அனைதல் ஒருபோதும் இல்லை எனிலோ என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ (6) அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே நசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான் இசையால் சென்றிங் கென்னைஅனை வீர்என்றுரைப்பேன் எனில்அதற்கும் இசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இழாரோ (8) என்பவை நான்கு பாடல்கள். எல்லாப் பாடல்களும் ‘என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ என்று இறுகின்றன. தன்னை மடவார் இகழ்ந்தாலும் தான் ஒற்றியூர் பெருமான்மீது கொண்ட காதல் உறுதி என் பதை நிலைநாட்டுகின்றார் தலைவி நிலையை ஏறிட்டுக் கொண்ட அடிகள். 95. காதல் மாட்சி: ஒற்றியூர் இறைவனின் உலாக் காட்சியில் உள்ளத்தைப் பறிகொடுத்து அப்பெருமான் மீது காதல் கொண்ட தலைவி அவரைப் பிடிக்க ஓடினா லும் அவரது ஓட்டத்தைப் பிடிக்கவொண்ணாதுள்ளது இராம.-9