பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 盘盘6 影 இராமலிங்க அடிகள் கண்ணாள சுடர்க்கமலக் கண்ணா என்னைக் கைவிடில்என் செய்வேனே கடைய னேனே. (3) கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே . கண்கலக்கம் கொள்கின்றேன் கவலை வாழ்வை எல்லாம்.உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும் இரங்கிலைனம் பெருமானே என்னே என்னே பொல்லாத செவ்வினையேன் எனினும் என்னைப் புண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ அல்லார்ந்த துயர்க்கடல்தின் றெடுத்தி டாயேல் ஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே (8) கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக் குருட்டறிவோர் இடைப்படும்என் குறைகள் எல்லாம் ஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ அவலமெனும் கருங்கடலில் அழுந்து கின்றேன் ஏறுவதோர் வகைஅறியேன் எந்தாய் எந்தாய் ஏற்றுகின்றோர் நின்னை அன்றி, இல்லேன் என்னைச் சிறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தைத் தெரியேனே சிறிய னேனே (10) என்பன இப்பதிகத்தின் நான்கு பாடல்கள். இவற்றால் சைவ வைணவ வேறுபாடு கருதா அடிகளைக் கான முடிகின்றது. - . 102. வீரராகவர் போற்றிப் பஞ்சகம்: இது திருஎவ்வுளுர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள வீரராக வப் பெருமான்மீது அமைந்த பஞ்சகம். பஞ்சகம் - ஐந்து பாடல் களைக் கொண்டது. பாடல்கள் அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்த யாப்பால் ஆனவை. 5. 108 திவ்விய (வைணவ) தேசங்களுள் ஒன்று. சென்னை - அரக்கோணம் இருப்பூர்தி வழியில் உள்ள நிலையம்.