பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 緣 117 據 பாண்டவர் துரத னாகப் பலித்தருள் பரனே போற்றி நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி தூண்டலில் லாமல் ஓங்குஞ் சோதிநல் விளக்கே போற்றி வேண்டவர் எவ்வு ளுர்வாழ் வீரரா கவனே போற்றி (2) அற்புதத் திருவை மார்பில் அனைந்தபே ரழகா போற்றி பொற்புறு திகிரி சங்கு - பொருந்துகைப் புனிதா போற்றி எற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி வெற்புயர் எவ்வு ஞர்வாழ் வீரரா கவனே போற்றி (5) என்பன இப்பஞ்சகத்தின் இரண்டு பாடல்கள். இத்திருப் பதி பற்றிய விவரமான குறிப்புகள் இவ்வாசிரியர் எழுதி யுள்ள நூலில் காணலாம்." 103. இரேணுகை தோத்திரம்": இது சென்னை 'ஏழுகி ணறு என்ற இடத்தில் அமைந்த திருக்கோயிலில் எழுந் தருளியுள்ள இரேணுகாதேவியின்மீது ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த ஐந்து பாடல்களைக் கொண்டது. இரண்டு பாடலகள் ஈண்டுக் காட்டப் பெறுகின்றன. - உவந்தொரு காசும் உதவிடாக் கொடிய உலுத்தர்தம் கடைதொறும் ஓடி 6. தொண்டை நாட்டுத் திருப்பதிகள் கட்டுரை காண்க. 7. அன்பர் ஒருவர் வேண்டுகோளுக்கிணங்க அடிகள் அருளிச் செய்தது.