பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மூன்றாம் திருமுறைப் பாடல்கள் இத்திருமுறையில் 27 பதிகங்களும் அவற்றுள் 612 பாடல்களும் அடங்கியுள்ளன. இதில் அகப்பொருட் பதிகங்கள் இல்லை. இத்திருமுறையில் சில பதிகங்களை யும் அவற்றுள் அடங்கிய சில பாடல்களையும் காண் போம். - - 1. திருவடிப் புகழ்ச்சி: இது காப்பாக திருநேரிசை வெண்பாவையும் நூற்றுத் தொண்ணுற்றிரு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் ஒன்றும் கொண்டது. இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லது.மற்று என்றுவரு மோஅறியேன், எங்கோவே - துன்றுமல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து சும்மா இருக்கும் சுகம். என்பது காப்பு, நீண்ட் ஆசிரிய விருத்தம் ஈண்டுத் தரப் பெறவில்லை. - - - 2. விண்ணப்பக் கலிவெண்பா: இது காப்பாக ஒரு நேரிசை வெண்பாவையும் 417 கண்ணிகளையும் கொண்ட ஒரு கலிவெண்பாவையும் கொண்டது. அவ்வவ் விடைவந்தசுற்றி அருள்தரலால் எவ்வெவ் விடையூறும் எய்தலிலம் - தெவ்வர்தமைக் கன்றுமத மாமுகமும் கண்மூன்றும் கொண்டிருந்த தொன்றதுநம் உள்ளம் உறைந்து. என்பது காப்பு.