பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 寧 i2 藩 பூவணமும் பூமணமும் போல அமர்ந்ததிருப் பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே - தீவனத்தில் கண்சுழிய லென்று கருணையளித் தென்னுளஞ்சேர் தண் சுழியில் வாழ்சிவ சாட்சியே - (203-204) தாமாத்துரர் வீழத் தடிந்தோள் கணேசனெடும் ஆமாத்தூர் வாழ்மெய் அருட்பிழம்பே - யாமேத்தும் உண்ணா முலையாள் உமையோடு மேவுதிரு அண்ணா மலைவாழ் அருட்சுடரே - (235-236) இப்படியெல்லாம் பல்வேறு தலத்துஎம் பெருமான் களை விளித்து, - நீறுடையாய் ஆறுடைய நீண்முடியாய் தேடரிய வீறுடையாய் நின்றனக்கோர் விண்ணப்பம் - மாறுபட எள்ள லடியேன் எனக்கருள் ஒளியாமல் - உள்ள படியே உரைக்கின்றேன் - (290-291). என்று கூறி தம்முடைய குறைபாடுகளையெல்லாம் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். - பொய்யுரைக்க வென்றால் புடையெழுவேன் அன்றியொரு மெய்யுரைக்க வென்னும் விழைந்ததிலை - வையகத்தில பொல்லா விரதத்தைப் போற்றியுவந் துண்பதல்லால் கொல்லா விரதத்தைக் கொண்டதிலை - அல்லாதார் வன்புகழைக் கேட்கமனங் கொண்ட தல்லாமல் நின்புகழைக் கேட்க நினைந்ததிலை - (293-295) மெய்யடிய னென்றுரைக்க வித்தகநின் பொன்னடிக்குப் பொய்யடிமை வேடங்கள் பூண்டதுண்டு - நையமிகு