பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 t24 蠍 இராமலிங்க அடிகள் இஃது அற்புதமான பாடல். பாடல் முழுவதையும் படித்து அநுபவிக்க வேண்டியது. அடிகளாரின் இறை யநுபவத்தை நாமும் துயக்க வேண்டியது. 3. நெஞ்சறிவுறுத்தல்: இது காப்பாக இரண்டு குறள் வெண்பாக்களையும் 703 கண்ணிகளைக் கொண்ட கலிவெண்பாவையும் கொண்டது. சிசான்ற முக்கட் சிவகளிற்றைச் சேர்ந்திடலாம் பேர்சான்ற இன்பம் பெரிது. - ஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப் பேறு மிகத்தான் பெரிது (1,2) இந்த இரண்டும் காப்பாக வருவன. . நெஞ்சை நோக்கி விளிக்கும் போக்கில் அடிகளார், பொன்னார் மலைபோல் பொலிவுற் றசையாமல் எந்நாளும் வாழியநீ என்நெஞ்சே - பின்னான இப்பிறப்பி னோடிங்கு எழுபிறப்பும் அன்றியெனை எப்பிறப்பும் விட்டகலா என்நெஞ்சே - செப்பமுடன் செவ்வொருசார் நின்று சிறியேன் கிளக்கின்ற இவ்வொருசொல் கேட்டிடும் என்நெஞ்சே - (1-3) என்று நெஞ்சை விளித்து தன் அறிவுரையைத் தொடங்கு கின்றார். தத்துவங்கலந்த இறைவனின் நிலை பேசப் பெறுகின்றது. உலகும் பரவும் ஒருமுதலாய் எங்கும் இலகும் சிவமாய் இறையாய் - விலகும் உருவாய் உருவில் உருவாய் உருவுள் அருவாய் அருவில் அருவாய் - உருஅருவாய் நித்தியமாய் நிற்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச் சத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் - முத்தியருள்