பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 岑 127 崇 நான்என்று நிற்கின் நடுவேயந் நானானத் தானென்று நிற்கும் சதுரனெவன் - மானென்ற மாயைதனைக் காட்டி.மறைப்பித்தம் மாயையிற்றன் சாயைதனைக் காட்டும் சதுரனெவன் - நேயமுடன் நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடுதொறும் தான்மறையும் மேன்மைச் சதுரனெவன் - (110-1.12) என்பன காண்க. அடுத்து ஐந்து கண்ணிகளில் (115-120) இறைவனைத் தேவன்' என்று தெரிவிக் கின்றார். - - முத்தரென யாவர் இருந்தார் அவர்காண வீற்றிருக்கும் தேவர் புகழ்தலைமைத் தேவனெவன் - யாவர்களும் இவ்வனத்தன் இவ்விடத்தன் இவ்வியலன் என்றறியார் செவ்வனத்தன் ஆம்தலைமைத் தேவனெவன் (115-116) என்பன காண்க. இன்னும் இறைவனைப் புற்றி தயாளன்’ (145-149), வள்ளல் (151-156) என்றெல்லாம் அறி முகம் செய்யும் கண்ணிகள் உள்ளன. மேலும் அப் ப்ன் (165-174), நற்றாய் (175-186) என்று அறிமு கம் செய்யும் கண்ணிகளும் உள்ளன. இறைவன் அழகே வடிவானவன். இதனை (208-233) என்ற கண்ணிகளில் காணலாம். கங்கைச் சடையழகும் காதன்மிகும் அச்சடைமேல் திங்கட் கொழுந்தின் திருவழகும் - திங்கள்தன்மேல் சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல் ஆர்த்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும்.