பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 操 129 等 காரிருளில் செல்லக் கலங்குகின்றாய் - மாதர்குழல் பேரிருளில் செல்வதனைப் பேர்த்திலையே - பாரிடையேர் எண்வாள் எனில்அஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார் கண்வாள் அறுப்பக் கனிந்தனைதே - மண்வாழும் ஒரானை யைக்கண்டால் ஒடுகின்றாய் மாதர்முலை ஈரானை யைக்கண்டி சைந்தனையே - சீரான வெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை வெற்பென்றால் ஏற விரைந்தனையே - பொற்பொன்றும் . சிங்கமென்றால் வாடித் தியங்குகின்றாய் மாதரிடைச் சிங்கமெனில் காணத் திரும்பினையே - இங்குசிறு பாம்பென்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதரல்குல் பாம்பென்றால் சற்றும் பயந்திலையே - (308-313) இங்ங்னம் 396 கண்ணி வரையில் இந்த அறிவுரை நீளுகின்றது. அடுத்து மனம் பொன்மேல் கொண்டுள்ள ஆசை யைப் பற்றி அறைகின்றார். நின்னாசை என்னென்பேன் நெய்வீழ் நெருப்பெனவே பொன்னாசை மேன்மேலும் பொங்கினையே - பொன்னாசை வைத்திழந்து வீணே வயிறெரிந்து மண்ணுலகில் எத்தனைபேர் நின்கண் எதிர்நின்றார் - தத்துகின்ற பொன்னுடையார் துன்பப் புணரியொன்றே அல்லது.மற். றென்னுடையார் கண்டிங் கிருந்தனையே - (397-399) ஒன்றொருசார் நில்என்றால் ஓடுகின்ற நீஅதனை என்றும் புரப்பதனுக் கென்செய்வாய் - வென்றியொடு இராம.-10