பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

常 13G 索 இராமலிங்க அடிகள் பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள் ஈர்த்துப் பறிக்கில்அதற். கென்செய்வாய் - (403-404) உன்நேயம் வேண்டி உலோபம் எனும்குறும்பன் இன்னே வருவன்அதற் கென்செய்வாய் - முன்னேதும் இல்லா நமக்குண்டோ இல்லையோ என்னுநலம் எல்லாம் அழியும்அதற் கென்செய்வாய் நில்லாமல் ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கல்அது பாய்ந்தோடிப் போவதுநீ பார்த்திலையே - ஆய்ந்தோர்சொல் கூத்தாட் டவைசேர் குழாம்விளித்தாற் போலுமென்ற சித்தாட் குறள்மொழியும் நேர்திலையே' (408-411) என்று பொன் போன்ற செல்வ நிலையாமையைச் செப்புகின்றார். அடுத்து மண்ணாசையைப் பற்றிக் குறிப்பிடுகின் றார். மனித மனம் மண்ணின்மீது கொண்டுள்ள ஆசை சொல்லும் தரமன்று. இதனை அடிகள், மண்ணாசை கொண்டனைநீ மண்ணாளும் மன்னரெலாம் மண்ணால் அழிதல் மதித்திலையே - எண்ணாது மண்கொண்டார் மாண்டார்தம் மாய்ந்தவுடல் வைக்கவயல் மண்கொண்டார் தம்இருப்பில், வைத்திலரே - திண்கொண்ட விண்னேகுங் கால்அங்கு வேண்டுமென ஈண்டுபிடி மண்ணேனும் கொண்டேக வல்லாரோ - (418-420) என்று மனத்தை நோக்கிப் பேசுகின்றார். பூமித்தாய் தான் மறைத்து வைத்திருக்கும் நிலக்கரி, மண்எண்ணெய் 1. கூத்தாட் டவைகுழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தத்து (332) (54-நிலையாமை-2) என்பது காண்க. -