பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 缘 131 常 முதலிய பல செல்வங்களை மன்பதைக்கு நல்கி உதவு கின்றாள். கையூட்டு வாங்குவோர், கறுப்புச் சந்தைக் காரர்கள், அரசியல் எத்தர்கள் தாம் தகாத வழியில் ஈட்டிய செல்வத்தை மண் வாங்கி மறைக்கின்றனர். இதுபற்றிய அன்றாட நீதிமன்ற வழக்குகள் நமக்குப் பறைசாற்றுகின்றன. ஐம்பெரும் பூதங்களில் மண் ஒன்றே திண்ணியது. மறைப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்தது. நிலையாமையைப் பற்றி நெஞ்சுக்கு அறிவுறுத்து வதை நாம் படித்து நெஞ்சில் நிறுத்த வேண்டியதொன் றாகும். பொய்என்று அறவோர் புலம்புறவும் இவ்வுடம்பை மெய்என்று பொய்ம்மயக்கம் மேவினையே - கைநின்று கூகா எணமடவார் கூடி அழல்கண்டும் நீகாதல் வைத்து நிகழ்ந்தனையே - மாகாதல் பெண்டிருந்து மாள்கப் பினங்கொண்டு செல்வாரைக் கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே - பண்டிருந்த ஊரார் பிணத்தின் உடன்சென்று நாம்மீண்டு நீராடல் சற்றும் நினைந்திலையே - சீராக இன்றிருந்தார் நாளைக்கு இருப்பதுபொய் என்றுஅறவோர் நன்றிருந்த வார்த்தையும்நீ நாடிலையே - ஒன்றி 'உறங்குவது போலும் என்ற ஒண்குறளின் வாய்மை மறங்கருதி அந்தோ மறந்தாய்" - கறங்கின் 'நெருநல் உளன்ஒருவன்’ என்னும் நெடுஞ்சொல் மருவும் குறட்பா மறந்தாய் - தெருவில் 2. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும பிறப்பு (33)- (34 நிலையாமை - 9) 3. நெருநல் உளன்.ஒருவன்.இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு (336) - மேலது - 6