பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

泳 136 密 இராமலிங்க அடிகள் பொறுத்தாள்.அத் தாயில் பொறுப்படையோய் நீதான் வெறுத்தால் இனி.என்செய் வேன். (67) மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங் கோலொங்கே வானோர் குடியெங்கே - கோலஞ்சேர் அண்டமெங்கே அவ்வவ் வரும்பொருளெங் கேநிதுை கண்டமங்கே நீலமுறாக் கால் (77) மெய்யாக நின்னைவிட் வேறோர் துணையில்லேன் ஐயா அதுநீ அறிந்ததுகாண் - பொய்யான தீதுசெய்வேன் தன்பிழையைச் சித்தம் குறித்திடில்யான் யாதுசெய்வேன் அந்தோ இனி (32) என்சிறுமை நோக்கா தெனக்கருளல் வேண்டுமென்றே நின்பெருமை நோக்கிஇங்கு நிற்கின்றேன் - என்பெரும யாதோநின் சித்தம் அறியேன் அடியேற்கெப் போதோ அருள்வாய் புகல் (35) கண்ணப்பன் ஏத்துதுதற் கண்ணப்ப மெய்ஞ்ஞான விண்ணப்ப நின்றனக்கோர் விண்ணப்பம் - மண்ணிற்சில் வானவரைப் போற்றும் மதத்தோர் பலருண்டு நானவரைச் சேராமல் நாட்டு (99) பொன்னின் றொளிரும் புரிசடையோய் நின்னையன்றிப் பின்னொன் றறியேன் பிழைநோக்கி - என்னை அடித்தாலு நீயே அனைத்தாலு நீயே பிடித்தேனுன் பொற்பாதப் பேறு (100) இப்பாரில் என்பிழைகள் எல்லாம். பொருத்தருளென். அப்பாநின் தாட்கே அடைக்கலங்காண் - இப்பாரில் நானினது தாள்நிழல் நண்ணுமட்டும் நின்னடியர் பானினது சீர்கேட்கப் பண் (102) . அனைத்தும் இனிய வெண்பாக்கள். படித்து அது பவித்து அநுபூதி நிலையைப் பெற முயல்வோமாக.